Election 2018

3/04/2013

| |

கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி

கல்குடா கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட  கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில்  இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (01ம் திகதி) மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் த.இதயராஜா அவர்களின் தலைமையில் கிண்ணையடி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மூன்று இல்லங்கள்  கலந்து கொண்டன. இதில் முதலாம் இடமாக கம்பன் இல்லமும், இரண்டாம் இடங்களாக வள்ளுவர் இல்லமும் பாரதி இல்லமும் வெற்றிகளைப் பொற்றுக்கொண்டன.
 
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் N.குணலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இவ் விளையாட்டு விழாவிற்கு  வலய உடற்கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.