உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/04/2013

| |

வடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி

வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்தவுள்ளோம். அதற்காக ஏனைய மாகாணசபைத் தேர்தல்களையும் நாம் பிற்போட்டுள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை. அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய எட்டு மாகாணசபைகளும் அனுபவிக்கும் அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.