உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/09/2013

| |

முன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பணம்

02கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் முதல் தடவையாக ஒரு வருடத்திற்கான டிப்ளோமா பாடநெறி ஒன்று இன்று(9.3.2013)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த பாடநெறியினை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் பொண் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம், தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் குணரட்ன, மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோபாலகிருஸ்னன்  உட்பட உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் அதிகாரிகள் பாலர்பாடசாலகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த டிப்ளோமா பாடநெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பங்கு கொண்டுள்ளனர்.