உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/19/2013

| |

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனம்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்திச்சபை ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பனம்பொருள் உற்பத்தியை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவிகள் பயிற்சி நெறிகள் என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் பனை அபிவிருத்திச்சபையின் மாவட்ட இணைப்பாளர் விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் க.தங்கேஸ்வரி,மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் குணரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கருத்துக்கள் பறிமாறப்பட்டன.
அத்துடன் சமுர்த்தி அதிகாரசபையின் ஊடாக பனை உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களின் உற்பத்தி வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கவும் இதன்போது உறுதி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட பனம்பொருள் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.