உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/09/2013

| |

புகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கையில் நடத்தபடவுள்ளது.

புகலிட இலக்கிய சந்திப்பின்  41 வது அமர்வு  இலங்கையில் நடத்தபடவுள்ளது.

கடந்த 25 வருடங்களாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இலக்கிய சந்திப்பு   முதலாவது முறையாக இலங்கையில் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.அண்மையில் லண்டனில் இடம்பெற்ற 40வது சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1988ம் ஆண்டிலிருந்து யேர்மன் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் நடத்தப்பட்டு வந்த இலக்கிய சந்திப்பானது   1992ம் ஆண்டு முதல் முறையாக பிரான்சில் நடத்தப்பட்டது.அதன்பின்னர் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கனடாவிலுமாக இதுவரை 40 அமர்வுகளை நடத்திவந்துள்ள இலக்கிய சந்திப்பானது தனது 25 வருட கருத்து சுதந்திரத்திற்கான போராட்ட அனுபவங்களுடன் இலங்கையில் காலடி வைப்பது இலங்கை தமிழர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.