உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/25/2013

| |

வட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினால் பழக் கன்றுகள் வழங்கி வைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினது முயற்சியின் பயனால் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டவான் எனும் கிராமத்தில் மாதிரி பழத் தோட்டம்  ஒன்று அமைக்கப்ட்டு வருகின்றன. சுமார்70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ் மாதிரி பழத்தோட்ட கிராமத்திலுள்ள 25 பயனாளிகள் திவிநெகும திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அவர்களைக் கொண்டு இப் பழத்தோட்டம் பராமரிக்கபட இருக்கின்றன.
இன்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் இப் பழத்தோட்டத்தில் பழ மரக் கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழக் கன்றுகளை வழங்கி வைத்ததுடன் பழக்கன்றுகளையும் நட்டு வைத்தார். வாழை ,பலா, கொய்யா, மா தோடை மற்றும் மாதுளை போன்ற பழமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இ;ந நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர்; ,விவசாய போதனாசிரியர்கள், கிரமத் தலைவர் சுரேஸ் உட்பட கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.