உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/29/2013

| |

தோழர் விநோதன் ஒரு தியாகி!தோழர் விநோதன் புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு கொல்லப்பட்டவர். 1976 தை மாதம் 12 ம் திகதி சண்டிலிப்பாயில் அவரது வீட்டில் வைத்து விநோதனுக்கு கள்ளக்கடத்தல் புள்ளிகளான குட்டிமனி,தங்கதுரை,ஜெகன் ஆகியோரோல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.விநோதன் மயிரிழையில் உயிர் தப்பினார். பிறிதொரு தடவை அவருடைய வீட்டிற்கு கைக்குண்டும் வீசப்பட்டது. பின்னர் 1999ம் ஆண்டு சித்திரை மாதம் 28ம் திகதி கொழும்பில் அவரது வீட்டில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அகில உலக கொலைமாமணி பிரபாகரனிடமிருந்து விநோதனால் தப்பிக்க முடியவில்லை.காற்றுப் புக முடியாத இடத்திலும் புகுந்து கொல்லும் வல்லமை படைத்தவன் அல்லவா பிரபாகரன்.
புத்தூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் விநோதனிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தேடி செல்வதற்கான உதவி தேடி வந்தான்.இதன் மூலம் வினோதனுக்கு நெருக்கமானான் அந்த இளைஞன். அவன் வீட்டிற்கு வந்தால் விநோதன் குடும்பத்தினர் அவனை வரவேற்று உணவு கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்த இளஞன் விநோதனின் நம்பிக்கைக்குரியவன் ஆகிவிட்டான். அந்த நம்பிக்கை தனக்கு ஆபத்தைக் கொடுக்கப் போகிறது என்று வினோதன் அறிந்திருக்கவில்லை.சிறிது நாட்களின் பின் அந்த இளைஞன் அவரது வீட்டு வாசலில் உள்ள காவல் அதிகாரிகள் தன்னை சோதனை செய்து துன்புறுத்துவதாக முறைப்பாடு செய்தான். அவனைச் சோதனை செய்ய வேண்டாம் என்று தனது காவலதிகாரிகளிடம் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை காரணமாக காவலதிகாரிகள் அந்த இளைஞனை சோதனை செய்யாமல் உள்ளே செல்ல அனுமதித்தனர்..விநோதன் தனது காவல் அதிகாரிகளுக்கு இட்ட கட்டளை அவருக்கு எமனாகியது.
ஒருநாள் விநோதனை சந்திக்க வந்த அந்த இளைஞன் விநோதனைச் சுட்டுக் கொன்றான். ஆனால் கொலைப்பழி வழக்கம் போல ஈபிடிபி கட்சியினர்மேல் சுமத்தப்பட்டது.நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத்தான் தூக்கும்.விநோதன் உயிருடன் இருந்தால் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்று ஈபிடிபி கட்சியினர் கொலை செய்தார்கள் என்று செய்தியை பரப்பினார்கள். விநோதனைக் கொலை கொலை செய்தவன் புலி இயக்க உறுப்பினர் என்று புத்தூரைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். ஒருவரைக் கொல்ல வேண்டுமென்றால் அவருடைய நம்பிக்கைக்குரியவராகி அவரைக் கொல்வது புலிகளின் பாணி.  அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் சந்திக்கச் சென்ற புலி உறுப்பினர்களான அறிவு,விசு ஆகியோரைச் சோதனையிட வேண்டாமென்று காவலதிகாரிகளிடம் அமிர்தலிங்கம் சொன்னதால் அறிவும்,விசுவும் துப்பாக்கியுடன் உள்ளே செல்ல முடிந்தது. ராஜீவ்காந்தி,பிரேமதாசா,மகேஸ்வரன் ஆகியோர் இப்படித்தான் புலிகளால் கொல்லப்பட்டனர். இப்படி துரோகி பட்டம் சூட்டிக் கொன்ற புலிகளால் தமிழர்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.புலிகளின் முக்கிய பிரமுகர் இன்று கே.பி, கருணா மற்றும் பலர் அரசங்கத்திற்குப் பாத்திரமானவர்களாக இருக்கின்றனர்.