உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/12/2013

| |

கிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள்

கிழக்கு மண்ணின் தனிமைத்துவம், விடுதலைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த வீரமறவர்களின் நினைவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வருடந்தோறும் நினைவு கூர்ந்து வருகின்றது.
அந்த வகையில் 2004 ஏப்ரல் 10 ஆம் திகதி கிழக்குமண்ணின் உரிமைக்காக போராடி வெருகல் பகுதியில் உயிர்நீத்த தினத்தில் இந்த வீரமறவர்களின் நினைவு தினத்தை;  கிழக்கின் தனித்துவத் தமிழ்க்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வருடமும் நேற்று (10.04.2013)  வெருகல்மலை சிறுவர் பூங்கா பகுதியில் மிகச் சிறப்பாக நடாத்தியது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் , தொண்டர்கள், உயிர்நீத்த வீரமறவர்களின் பெற்றோர்கள், உடன்பிறப்புகள் மற்றும் கிழக்கு மண்ணை நேசிக்கும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
வீரமறவர்களின் இந்நினைவு தினத்தில் உயிர்நீத்தவர்களுக்கு கட்சியின் தலைமை மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களாலும்  விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நினைவுப் பேருரையும் ஆற்றப்பட்டது.
அதுமட்டுமன்றி  உயிர்நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காக வெருகல் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகளும்;, அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வுகளின் நிழற்படங்கள் இங்கே காணப்படுகின்றன.