உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/24/2013

| |

பாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி பாவிக்கத்தடை - கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர்-

செங்கலடியில் கடந்த 07 ஏப்ரல் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாக செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி பணிப்பாளரினால் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தரம் 9 -13 வரையிலான மாணவர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாடசாலை வேளைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்போன் பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுவோர் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் சிறி கிருஸ்னானந்தராசா அவர்கள் தெரிவித்தார்.
கல்குடா வலயத்திலுள்ள அணைத்து பாடசாலைகளிலும், பாடசாலை வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன் கொண்டுவருவது என்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மற்றும் பாடவேனளகளில் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பாவனை மாணவர் மத்தியில் அதிகரித்து வருவதுடன், அத்தகைய பாவனையினால் மாணவர்கள் காதல் மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தமை அண்மையில் இடம்பெற்ற கொலையில் நிருபணமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.