7/31/2013

| |

துரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வேலைகள்

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் 150 மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதன் நிர்மாண வேலைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என ஒப்பந்தகாரர் எஸ்.எஸ்.ஆர்.சசி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக வெபர் மைதானம் காணப்படுகின்றது.
சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய சகல வசதிகளுடனும் கூடிய நவீன விளையாட்டு அரங்காக இந்த மைதானம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில் 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், கால்ப்பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்டக்கூடம், பெட்மீட்டர்ன் தளம்  என அனைத்து விதமான
விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.
வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.