உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/19/2013

| |

முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது பிறந்த தினம்

கிழக்கு மாகாண சபையின் முதல் மற்றும் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவனேசதுரை  சந்திரகாந்தன் அவர்கள் இன்று (18.08.2013) தனது 38 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். கிழக்கு மக்களிற்கு தனித்தவமான ஒரு தன்மதிப்பு, சுயகௌரவம், முகவரி கொடுத்த கிழக்கின் முத்தான எமது தலைவனை சீர்போற்ற வாழ்த்துவதல் உண்மைகள்  இணையம் பெருமை கொள்கின்றது.
கிழக்கு மண்ணில் மாகாண சபயை உருவாக்கி கிழக்கு மக்களின் தனித்துவத்தை பாதுகாத்தது மட்டுமன்றி "வரண்டு கிடந்த பாலைவனத்தை ஈரநிலமாக மாற்றுவது"  என்பது மிகவும் அரிய காரியமாகும். அதேபோன்று போரின் வடுக்களினால் தூர்ந்துபோயிருந்த எமது பிரதேசத்தில் கல்வி , பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டு பெரும் சாதனையை நிகழ்த்தியவர் என்றால் அது மிகையில்லை.
தொடர்ந்தும் கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கு இறுதிவரை சேவையாற்றுகின்ற ஒரு தலைவனாக இருந்து பல்லாண்டு காலம் வாழ எமது வாழ்த்துக்களையும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சார்பில் போற்றி  வாழ்த்துகின்றோம்.