உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/19/2013

| |

த.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியில் உண்மையில்லை – பிரசாந்தன்
கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என்பதுடன், எமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படும் சக்திகளினால் வழங்கப்பட்ட பொய்ச்செய்தியாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் கடந்த காலங்களாக எமது கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியதாக சில சக்திகள் இத்தகைய செயல்களைச் செய்து வருகின்றன.
இத்தகைய செய்தியினை நாம் வண்மையாகக் கண்டிப்பதுடன், எமது கட்சி தொடர்பாக இத்தகைய செய்திகள் வெளிவருகின்றபோது அவற்றின் உண்மைத் தண்மையினை அறிந்து ஊடகங்கள் செயற்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி