உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/22/2013

| |

கிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி விருது

கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசியர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அறிவித்துள்ளார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலாக சர்வதேச மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் விஷேட திறன்களை வெளிப்படுத்திய அதிபர்கள் மற்றும் அசிரியர்களுக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த ஐந்து அதிபர்களும் மூன்று ஆசிரியர்களும் என எட்டு பேர் இந்த விருது வழங்கப்படவுள்ளது என மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
"இதற்கான விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்ட போதிலும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டியோர் மாத்திரம் இதற்காக வலயக் கல்வி பணிப்பாளர்களினால் சிபாரிசு செய்ய்பபட்டுள்ளனர். இதனை பரவலாக்கும் விதத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற மாகாண கல்வி திணைக்களம் கோரியுள்ளது" என அவர் தெரிவித்தார்.