உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/17/2013

| |

மக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் *கல்குடா வலயக்கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு, கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று ஐனாதிபதியின் ஆலோசகரும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள
ஐனாதிபதியின் ஆலோசகர் செயலகத்தில் நடைபெற்றது.
வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, கிரான் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்குடா வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்படுத்தலும் க.பொ.த(சாஃத) க.பொ.த(உஃத) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கும் பாடரீதியிலான பெறுபேறுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா,  உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரன், கல்குடா வலயக் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.