உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/07/2013

| |

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு அடுத்தவாரம் நடைபெறும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு செப்டெம்பர் 12,13 ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

இது தொர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இன்றைய தினம், கிழக்குப் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில், உபவேந்தர், பதிவாளர் கே.மகேசன், தாவரவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. சந்திரகாந்தா மகேந்திரநாதன், தகவல் தொடர்பு நிலைய பொறுப்பாளர் கலாநிதி எம்.கோணேஸ்வரன், பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.பவான், கல்வித்துறை பதில் தலைவரும் சிரேஸ்ட மாணவ ஆலோசகருமான எம்.ரவி, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி கிருணாள் திருமார்பன் வெளிவாரிக்கற்கைகள் பிரிவு தலைவர் ஏ.அன்றூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு, யுத்தத்துக்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது. 

இதில், பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். அத்துடன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜீ, மற்றும் பிரித்தானியாவின் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் விவசாய அபிவிருத்தி மற்றும் கொள்கை அபிவிருத்தி பிரிவு இணைப்பேராசிரியர் கலாநிதி அலிஸ்டெயர் ஜெ.மேர்டெச் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.6 அமர்வுகளாக நடைபெறவுள்ள இவ் மாநாட்டில் 12ஆம் திகதி மாலை மாநாட்டு கலாசாசர நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ளன.

இவ் மாநாட்டுக்கென அறிவிக்கப்பட்டமைக்கமைவாக கிடைக்கப் பெற்ற 112 ஆய்வுக் கட்டுரைகளில் வாய்மொழிமூல மற்றும் காட்சிப்படுத்தல்களுக்காக 61 கட்டுரைகள் சர்வதேச, தேசிய துறைசார் நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

இவ் மாநாட்டு நிகழ்வுகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசரியர் சானிகா ஹிருபுருகம, உயர்க்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரெட்ண ஆகியோரும் கலந்து கொள்ள வுள்ளனர் 

2006ஆம் ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக:குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டதுடன், அது தேசிய அளவில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை இவ் மாநாடு சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.