உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/24/2013

| |

கிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை

கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைரிற்கு இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி நீதவானினால் முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி நடடிக்கையில் ஈடுபட்டனர் என குற்றப்புலனாய் பிரிவினரால் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் சந்தேகநபர்களாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக எம்.எஸ்.சுபைர் செயற்பட்டபோது அவரின் பிரத்தியோக செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்தௌபீக் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று ஓட்டமாவடி நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தில் முன் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் மூன்று சரீரப் பிணையிலும் முன் பிணை வழங்கப்பட்டது.