10/02/2013

| |

13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவதற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டே அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தனி நபர் பிரேரணையை அவர் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரிநின்றார். அதன்பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரியந்த பத்திரண எதிராக வாக்களித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எனினும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் தலைமையிலான கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.