உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/28/2013

| |

பொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்!

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சனை குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூட்டது என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மாநாடு முக்கியமானதாகும். எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியமாகும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சனை குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, ஆனால் நான் கலந்து கொள்வது உறுதி என்றும் தெரிவித்தார்.