10/14/2013

| |

பாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இரவு நேரம் பயணிக்கும் பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரத்தில் முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டி மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம்.அலிபா தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக கழட்டப்பட்டிருந்த முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டியே மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பெட்டி கடந்த 7ஆம்; திகதி திங்கட்கிழமை முதலே இணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டி இணைக்கப்பட்டுள்ள பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டக்கப்பிளிருந்து கொழும்புக்கு பயணிக்கும் என புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம்.அலிபா குறிப்பிட்டார்.
இந்த பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரம் மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்புக்கு புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.