10/17/2013

| |

ஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு

இன ஒற்றுமைக்கும் சமாதானத்திற்குமான அமைப்பினால் ஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனையொட்டி நேற்று (15) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் மீராகேணி சிறுவர் பாராமரிப்பு இல்லத்திற்கு தளபாட வசதிகள் வழங்கப்பட்டன.
தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சினால் ரூபாய் 50,000 பெறுமதி வாய்ந்த தளபாடங்கள் மற்றும் உணவு தட்டு வசதிகள் என்பன மீராகேணி சிறுவர் பாராமரிப்பு இல்லத்திற்கு இதன்போது அன்பளிப்புச் செய்யப்பட்டன.
தளபாடங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வில், இன ஒற்றுமைக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் செயலாளர் ஆர்.எம்.அரசாத், மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சந்திரகுமார், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.சஜீர், அதன் ஆலோசகர் எம்.றிழா, இல்ல மாணவர்கள், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.