10/26/2013

| |

கால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில்  கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேச்சல்தரை பிரதேசத்தில் அத்துமீறி சட்டவிரோதமாக காடுகளை அழிப்பது மற்றும் மேச்சல்தரைக்கு சொந்தமான  நிலங்களை பெரும்போக நெல் வேளாண்மைக்கு செய்கைக்கு  முற்படவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை வளர்பாளர்கள் நேற்று வியாழக்கிழமை  மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் பால்உற்பத்தியை பெருக்குவதற்காக 1976 ம் ஆண்டு வர்த்தமானியில் வட்டமடு பிரதேசம் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலப்பரப்பு கால்நடைகளுக்கான மேச்சல்; தரைக்காக  அறிவிக்கப்பட்டு பிரசுரம் செய்யப்பட்டது இந் நிலையில் கடந்த கால யுத்த சூழ்நிலையில் இப்பிரதேசத்திற்கு கால்நடையாளர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதை பயன்படுத்தி சட்டத்திற்கு விரோதமாக இவ் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை சட்டரீதியற்ற காணிப்பத்திரங்களை அரசியல் செல்வாக்கு மூலம் வழங்கப்பட்டு இவ் நிலங்களை ஆக்கிரம்பு செய்துவருவது காடுகளை அழித்துவருகின்றனர் .
இவ் ஆக்கிரமிப்புக்கு எதிர்பு தெரிவித்து கால் நடை பால் பண்ணையாளர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வட்டமடு பிரதேசத்தில் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அரசாங்கமே கால்நடைகளுக்கு 1976 ம் ஆண்டு ஒதுக்கிய மேச்சல் தரையை மீட்டுத்தாருங்கள், சட்டவிரோதமாக காடுகளை அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும், பொலிசார் பக்கசார்பற்று நீதியாக செயற்படவேண்டும், அரசாங்கமே கால் நடைகளுக்கு ஓதுக்கிய மேச்சல் தரையை ஆக்கிரமிப்பவர்களை வேளியேற்று, கால்நடைகளுக்கு ஒதுக்கிய மேச்சல்தரையை  பெற்றுத்தராவிடில் கால்நடைகளை பெறுப்பேற்கவும், என சுலோகங்கள் தாங்கியவாறு கேசங்கள் எழுப்பியவாறு 100 க்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஃ.
இதனை தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் தங்களுக்கு மேச்சல்தரையில் ஒர ஏக்கர் நிலப்பரப்பை கூட வழங்கக் கூடாது இதனையும் மீறி வழங்கப்படுமாயில் இவ்விடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் குடும்பங்களுடன் இருப்பபோவதாக தெரிவித்த்து சுமார் 30 நிமிடங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்;றனர்.
இதேவேளை கடந்த மாதம் இப்பிரதேசத்தில் ஆர்பாட்டத்தில் கால்நடையாளர்கள் ஈடுபட்டதுடன் காடுகளை அழித்த 31 பேih பிடித்து பொலிசாருடன் ஓப்படைத்ததுடன் இப் பிரதேசம் 1976 ம் ஆண்டு மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டதுடன் 2010ம் ஆண்டு இப்பிரதேசம் அடங்கலாக வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது