உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2013

| |

கிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்பாடு

கிழக்கில் தொடர்ந்து கடும் வறட்சி நிலவுவதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏற்கெனவே பெய்யத் தொடங்கியிருக்க வேண்டிய பருவ மழை நீண்ட நாட்களாக இல்லாதிருப்பதே இந்த வறட்சிக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனை, பூநகர், பூமரத்தடிச்சேனை, ஈச்சிலம்பற்று, வட்டவன் மற்றும் இலங்கைத்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கிணறுகளில் நிலத்தடி நீர் முற்றாக வற்றிவிட்ட நிலைமை காணப்படுகின்றது.