உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/28/2013

| |

மட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்!

போர்த்துக்கேச பேகர் நிதியத்தின் ஏற்பாட்டில் பேகர் தினம் மட்டக்களப்பில் உள்ள சின்ன உப்போடை சமூக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிதியத்தின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருட்தந்தை பிரான்சிஸ் எக்ஸ்விர் டயஸ் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
பேகர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சின்ன உப்போடை சமூக கலாசார மண்டபத்தில் இலங்கை பேகர் போர்த்துகீச பேகர் நிதியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை பேகர் போர்த்துகீச பேகர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை பிரான்சிஸ் எக்ஸ்விர் டயஸ் தலைமை தாங்கினார்.
இராணுவத்தின்  மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கட்டளை அதிகாரி பிரிகேடியர் கொடுப்பிலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.மலர்ச்செல்வன்,மட்டக்களப்பு மாவட்ட 231 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் சுகத்த திலகரட்ன, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ராகல் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 போர்த்துக்கேயர் நாட்டை ஆண்டபோது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஏராளமான போர்த்துக்கீசர்கள் வந்து தங்கினர். இவர்களின் வாரிசுகள் இன்றும் மட்டக்களப்பில் வாழ்கின்றார்கள்.

இவர்களின் சமூக கட்டமைப்புகள், கலாசார விழுமியங்கள், பண்பாடுகள் போன்றவற்றை எதிர்கால சந்ததிக்கு அறிமுகம் செய்கின்ற வகையில் விழா அமைந்தது.

போர்த்துக்க்கேய பாரம்பரியங்களைக் கொண்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.