உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/26/2013

| |

யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5ஆம் கிராமம் வீரத்திடலில் யானைகளின் தாக்குதலிலிருந்து பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்வம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இப்பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் சுவர் வீழ்த்தப்பட்டு நெல்மூடைகளை எடுக்கப்படுவதை அவதானித்துள்ளார்.
இது காட்டு யானைகளின் செயற்பாடு என்பதை அறிந்த அப் வீட்டின் பின்கதவால் ஓடி உயிர் தப்பியுள்ளார்.
பின்னர் இச்சம்  தொடர்பாக சவளக்கடை பொலிஸார் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆகியோரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் தெருமின்விளக்குகள் இன்மையால் இரவு வேளைகளில் ஊருக்குள் நுழையும் யானைகள் எவ்விடத்தில் மறைந்து நிற்கின்றது என்பதை அறியமுடியாதுள்ளதாக பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.