10/27/2013

| |

முதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட பாறையை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லை அருகே, 2000 ஆண்டுகள் பழமையான, 'சமணர் படுகை' கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 'கிரானைட்' கற்களுக்காக, பாறையை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ளது மருகால்தலை. இங்குள்ள பாறைக் குன்று ஒன்றில், சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கியதன் அடையாளமாக, 'சமணர் படுகை' கள் உள்ளன. இதை, 1906ம் ஆண்டில், எல்.ஏ.கேமைட் என்ற ஆங்கிலேய தொல்லியலார் கண்டறிந்தார். தமிழகத்தில் முதன்முறையாக, 'தமிழ் பிராமி' இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.