உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/07/2013

| |

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு.

மட்டக்களப்பு பாடுமீன் லயனஸ் கழகத்தினால் தேசிய மட்டத்தில சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் அ.ஜெயகரன் தலைமை மட்டக்களப்பு கபேகில் ஹொட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவடட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.
இதன் போது தேசிய மட்டத்தில் பல சாதனைகள் படைத்து இறுதியாக நடந்த 25 ஆவது ஸ்ரீ லங்கா யூத் தேசிய விளையாட்டு விழா மற்றும் 39 ஆவது தேசிய விளையாட்டு  மட்டக்களப்பு கபடி ஆண்கள் அணியினர் மற்றும் தேசிய மட்டத்தில் சாதனைபடைத்த மட்டக்களப்பு கிறிக்கட் பெண்கள் அணியினர் மல்யுத்த வீரர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ரி.ஈஸ்பரனும் கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் சிறந்த சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் லயன் எம்.மனோகரன்,லயன்,ஜீ.பாஸ்கரன்,லயன் என்.ரஞ்சன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன,எஸ்.மகேந்திரகுமார், வின்;சன் மகளீர் தேசிய பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்