10/26/2013

| |

முதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்கிறார்! அரியம் எம்.பி

வரலாறு தெரியா விட்டால் யாழ் பாராளுமன்ற உறுப் பினரிடம் கேட்டு முதலமைச்சர் தெரிந்திருக்க வேண்டும் என அரியநேந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ் வரன் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்தது தொடர்பில் தனது முகப்புத்தக நண்பர்கள் தமிழ் மக்கள் பல பிரதேசங்களில் குடியமர்தப்படவில்லை, நிலம் அபகரிக்கப்படுகிறது முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே எனக் கேட்டதற்கு பதில் அளிக்கையிலேயே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை குடியமர்த்தப்படாமைக்கான காரணம் அரசாங்கமும் அரசில் ஒட்டியிருக்கும் றிசாட்பதியூதீன் அமைச்சருமேயன்றி வேறுயாருமில்லை. வடமாகாண சபை ஆரமபிக்கப்படும்வரை அரசாங்கம் ஏன் முஸ்லிம் மக்களை ஏற்கனவே குடியமர்த்த வில்லை என்பதை வடமாகாண முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். 

சிலவேளை முதலமைச்சருக்கு வரலாறு தெரியாவிட்டால் வரலாறு தெரிந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டு அறியலாம். வடமாகாண தமிழ் மக்கள் பல இடங்களில் இடம்பெயர்ந்து சொல்லொண்ணா துன்பத்தில் மரநிழலிலும் கூடாரங்களிலும் அவல வாழ்கையை வாழ்கின்றனர். இவர்களின் கண்ணீரையும் போக்கவும் உரிமை கிடைப்பதற்கான இராயதந்திர வழி முறை யையும் வடமாகாணசபை ஆற்றுப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்