10/07/2013

| |

ரவிவர்மா

Mathuஇலங்கையின் இரு பிரபல ஊடகவியலாளர்கள் மறைவு வீரகேசரி நடராஜா, தினக்குரல் ரவிவர்மா வீரகேசரி நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர், எஸ்.நடராஜாவும், தினக்குரல் நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ரவிவர்மாவும், நேற்று காலமாகினர். இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா, 1950களில் ஊடகத்துறைக்குள் நுழைந்து, நான்கு பத்தாண்டுகளாக வீரகேசரி ஆசிரியபீடத்தில் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்தவராவார். இவர் 1997ம் ஆண்டு தொடக்கம், 2005ம் ஆண்டு வரை- வீரகேசரியின் பிரதம ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். வாயாடி, குருவி போன்ற புனைபெயர்களில் வெளியான இவரது பத்திகள் மிகவும் பிரபலமானவையாகும். அதேவேளை, தினக்குரல் நாளிதழில் உதவிஆசிரியராக பணியாற்றிய, ரவிவர்மாவும் நேற்று சுகவீனம் காரணமாக காலமானார். இவர், நீண்டகாலமாக தினக்குரல் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய இவர், சிறந்த அரசியல் கட்டுரைகள், பத்திகளையும் எழுதி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்றிருந்தார். மூத்த ஊடகவியலாளர் எஸ்.நடராஜா மற்றும் ரவிவர்மா ஆகியோரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.