உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/01/2013

| |

முதலமைச்சர் விக்கி சினிமா பாணியில் மாரடைப்பு நாடகம்?



ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சகல மாகாண முதலமைச்சர்களுக்கும் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கமைய நேற்று 8 மாகாணங்களின் முதலமைச்சர்கள் பங்குகொண்டனர். அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்கள் அழைக்கப் பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவான பின் மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. வட பகுதிக்கு சென்ற அமெ ரிக்க தூதுவரை வடமாகாண முதலமைச்சர் நேற்று முன்தினம் சந்தித்தார். அதன் பின் சுகவீனமுற்ற அவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அறிய வருகிறது.

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் உண்மையிலேயே சுகவீனம் காரணமாகத்தான் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாரா? என்று அரசியல் அவதானிகள் பலத்த சந்தேகம் எழுப்பு உள்ளார்கள்.
ஏனென்றால் இன்று காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.
அமைச்சரவை கூட்டங்களில் பங்குபற்ற வேண்டாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கனதியான அழுத்தங்களை பிரயோகித்து உள்ளது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்குபற்றாமல் தவிர்க்கவே விக்னேஸ்வரன் சுகவீன நாடகம் ஆடி வைத்தியசாலையில் சேர்ந்து இருக்க வேண்டும் என்று வலுவாக சந்தேகிக்க வேண்டி உள்ளது.
ஏனென்றால் அமெரிக்க தூதுவரை முன்னதாக நேற்று யாழ்ப்பாணத்தில் சந்திக்கின்ற வரை விக்னேஸ்வரன் மிக நன்றாகவே இருந்து இருக்கின்றார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மருத்துவ அவதானத்துக்காகவே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.