11/12/2013

| |

வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா

கல்குடா கல்வி வலயத்தின் வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா இன்று 12.11.2013 வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இப்பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமாhன சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் அதிதிகள் வரிசையிலே கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் (அபிவிருத்தி) அனந்தரூபன், கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம் மற்றும் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்N;றார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
கலாசாரத்ததை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். திறமையான மாணவர்கள் மற்றும்; ஆசிரியர்கள் அத்தோடு அதிதிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.