உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/07/2013

| |

மண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதம்

மட்டக்களப்பின் மண்முனை - கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் மண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இப் பாலத்தின் வேலைகள் வரும் மே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாலம் 210 மீற்றர் நீளத்துடனும் 9.8 மீற்றர் அகலத்துடனும் அமையவுள்ளது.
இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்பட்டு வருகின்றது.
பாலம் அமையவுள்ள இவ் வாவியின் கிழக்குமுனையில் மட்டு நகருக்கான பிரதான வீதி (ஏ-4)யையும், மேற்கு முனை விவசாயப் பகுதியாகவும் கொண்டுள்ளது. தற்போது கிழக்கிற்கும் மேற்கிற்குமான போக்குவரத்துக்காக இயந்திரப்பாதை சேவை நடத்தப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் மூலம் மட்டக்களப்பின் பொருளாதார முன்னேற்றம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.