உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/08/2013

| |

ஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்' கண்காட்சி

''ஓவியங்களினூடாக செட்டிப்பாளையக் கிராமம்'' எனும் தொனிப் பொருளின் கீழ் சித்திர கண்காட்சி ஒன்று மட்.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலனந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் த.தனபாலன் மற்றும் எம்.கீதாஞ்சன் ஆகிய இருவரின் ஓவியங்கள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு செட்டிபாளையம் கிராமத்தின் பாரம்பரியத்தினை தமது ஓவியங்கள் மூலம் இக்கலைஞர்கள்  காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்.செட்டிபாளையம் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எஸ்.அருள்ராசா  இக் கண்காட்சிக் கூத்தினை திறந்து வைத்தார். 
இக்கண்காட்சியை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள்  என பலரும்  மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டமை; குறிப்பிடத்தக்கது.