உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/07/2013

| |

1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் நிகழ்வு

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் நிகழ்வு இன்று (07) சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள டேபா மண்டபத்தல் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் , கிழக்குமகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் உட்பட் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.