உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/13/2013

| |

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் ஊழியர்களே வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலதிக கொடுப்பனவை வழங்குதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கதிரியக்க தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறியை மீண்டும் தொடங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் கதிரியக்க பட்டதாரிகளை வேலைக்கு உள்வாங்குதல் ஆகியனவே இவர்களின் கோரிக்கைகளாகும்.
இதனால் போராட்டத்தினால் குறித்த பகுதியின் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதன் காரணமாக நோயாளர்கள் நீண்ட வரிசையில் நிற்தை காணமுடிந்தது.