உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/14/2013

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். ...
.. அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு தாவிய அம்பாறை மாவட்ட எம்.பியான பியசேன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்.மிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
அதில் உள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் ஸ்ரீதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம்.
இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.
எமது நாட்டை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். தற்போது மகிந்த என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுக்க முடியவில்லை. இதனால் தான் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.