12/31/2013

| |

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்தவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியி; ஆலொசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தர்மரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கௌரவ அதிதிகளாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு சாகசங்களைக்கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களில் சாதனை படைத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக கராத்தே பயிற்சியினைப்பெற்று கறுத்தப்பட்டடி பெற்றவர்களுக்கு இதன்போது அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் கராத்தே கலையினை கற்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதி சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.