உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/06/2013

| |

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித்தலைவரும் யாழ்.மாவட்ட அமைப்பாளரமான கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி. தவராசா  அறிவித்துள்ளார்.    
                           
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
 
எமது கட்சியின் மூத்த உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமாகிய டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன.
 
ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன்; கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம் குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது.
 
ஆனாலும், இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மற்றும் படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த காலங்களில் பேரவலங்களையே சந்தித்து வந்திருக்கின்றார்கள்.
 
இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததும் இல்லை. நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை. கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல் இல்லை. ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்.
 
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களினது படுகொலையானது தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
 
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களின் படுகொலை குறித்த கொலையாளிகள் யார் என்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் ஒழிந்து தீர்ப்புவழங்கப்படும் வரை எமதுகட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது.
 
எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்துமீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்..