12/31/2013

| |

லயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூடுகள் யாழ். துரையப்பா அரங்கில் காட்சிக்கு வைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள இரணைத்தீவுக்கு அப்பால் 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முற்பகல் 11 மணியளவில் எல்.ரி.ரி.ஈ. ஷெல் தாக்குதலின் மூலம் ஆள்கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ரஷ்ய விமா னியின் தங்கப் பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் இரணைத் தீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது.
இதனை தோண்டி எடுக்கும் பணிகள் இவ்வாண்டு மே மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன.
இந்த விமானத்தில் 4 ரஷ்ய விமானிகள் உட்பட 7 விமான சிப்பந்திகளும் 48 பயணிகளும் இருந்தனர். எல்லாமாக 3 விமான உபசரணையாளர்களும் இருந்தனர். இதில் பெண் உபசரணையாளராக இருந்த செல்வி தர்ஷினி குணசேகர முன்னாள் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.
இந்த விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.