உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/06/2013

| |

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்

அவருக்கு வயது 95.

மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.