1/15/2014

| |

விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சந்திரகாந்தன்

தொழில்களிலே அனைவருக்கும் உணவுவழங்குகின்ற விவசாயிகளின் புனித நாளாக இந்தத் தைப்பொங்கல் நிகழ்வு காணப்படுகின்றது. இந்த இனிய நாளில் உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு  துணைபுரியும் சூரியனுக்கு நன்றி தெரிவித்து இந்த பொங்கல் நிகழ்வை கொண்டாடுகின்றனர்.
கடந்த வருடத்தின் இறுதியில் பருவமழை குறைவாகக் கிடைத்தபோதிலும் தற்போது கிடைத்துக்கொண்டிருக்கும் குறைந்தளவிலான மழையாவது விவசாய நிலங்களுக்கு போதுமாளவு கிடைப்பதுடன், உணவு வழங்கும் விவசாயிகளின் பொரளாதாரமும் மேம்படவேண்டும்.
இந்த இனிய நாளில்  தைப்பொங்கல் நிகழ்வினைக் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது தைப்பொங்கல் வாழ்;த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்வடைகின்றேன்.
(முன்னாள் முதல்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஜனாதிபதியின் ஆலோசகர்)