1/20/2014

| |

மட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு புத்தக வெளியீடு

மட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தக வெளியீடானது இன்று காலை 2014.01.19ம் திகதி மட்டக்களப்பு பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் கே.அருளானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கங்கேஸ்வரன் சிவசங்கரி அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி இணைப்பாளருமான ஜெயபாலன்,கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி வி.ஆர் றாகல் மற்றும் வெளியீடு செய்யப்படும் புத்தகத்தின் நூலாசிரியர்களான கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன் மற்றம் எ. அன்டன் அருள்ராஜ் ஆகியோரும் அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயசிங்கம் மற்றும் மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மாவட்ட செயலக சிரேஸ்ட கணக்காளர் நேசராசா மற்றும் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காய்வாளர்,தேவகாந்தன் மற்றும் ஏடுகள் நிறுனத்தின் செயலாளர் பிறேமானந்தன் மற்றும் அவ் அமைப்பின் உறுப்பினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி ஆர்வலர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கு பல்கலைக் கழக வணிகப் பிரிவு மாணவர்களுக்கு உகந்த இரண்டு வகையான புத்தகங்கள் வெளியீடு செய்யப்பட்டன
01.   NETWORK ANALYSIS
0    02.   TRASPORTATION TECHNIQUE
 
நூலாசிரியர்கள்…
   01. கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன் (கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்)
   02. திரு அன்டன் அருள்ராஜ் (கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்)
வெளியிடும் நிறுவனம்
ஏடுகள் அமைப்பு (AEDU – Association of  Education Development Unit)