1/04/2014

| |

நாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் கருணா அம்மானுடனும் பேசி உள்ளோம்

தமிழ் மக்­களின் சமூக, பொரு­ளா­தார, கல்வி நிலையை மேம்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக நாம் பொது­நோக்­குடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பு­டனும் கருணா அம்­மா­னு­டனும் பேசி உள்ளோம். ஆனால், பொது இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்தை விமர்­சிக்­கின்ற எமது மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பின் கதவால் சென்று அர­சாங்­கத்­திடம் சலு­கை­களை கை நிறையப் பெற்­று­விட்டு மக்கள் மத்­தியில் உரிமை, உரிமை என்று பேசி அவர்­களை ஏமாற்றி வரு­கின்­றனர். வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார்.
துறை­நீ­லா­வணை சித்தி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட மாடிக்­கட்­டிடத் தொகு­தியின் திறப்பு விழா அண்­மையில் அதிபர் அழ­கிப்­போடி மனோ­கரன் தலை­மையில் நடை­பெற்­றது.
அவர் மேலும் பேசு­கையில்,
  தென்­ப­கு­தியின் அர­சியல் நிலை­மையைப் பார்க்கும் போது பதி­னெட்­டா­வது திருத்தச் சட்­டத்­திற்­க­மைய ஜனா­தி­ப­தித்­தேர்தல் இடம்­பெ­று­மாயின் மீண்டும் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­ப­டுவார். இதனை விடுத்து சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவோ, முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­காவோ தெரி­வாகும் சூழ்­நிலை இல்லை. இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்
வெற்று வார்த்­தை­க­ளைப்­பேசிப் பேசி எமது மக்­களை ஏமாற்ற முடி­யாது. இன்று பிறக்­கின்ற பிள்­ளைகள் மிகவும் நுண்­ண­றி­வு­மிக்­க­வர்­க­ளாக பிறக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு கல்வி புகட்டும் ஆசி­ரி­யர்கள் தொடர்ந்து கற்­ப­வர்­க­ளா­கவும் தேடல்­மிக்­க­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். இல்­லையேல் இப்­பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க முடி­யாமல் திண்­டாடும் நிலை ஏற்­படும்.
தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்குள் பாரிய பிள­வுகள் உள்­ள­மையைக் காணலாம். ஜோசப் பர­ரா­ச­சிங்­கத்­திற்கு மட்­டக்­க­ளப்பில் இரு அணி­க­ளாக நின்று அஞ்­ச­லிக்­கூட்டம் நடத்­தி­யுள்­ளனர். வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி. விக்­னேஸ்­வரன் ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து பேச­வுள்­ள­தாக கூறு­கின்றார். இணக்க அர­சியல் செய்ய முயற்­சிக்­கின்றார். இல்லை இதற்கு அனு­ம­திக்க முடி­யா­தென கூட்­ட­மைப்­புக்குள் சிலர் முரண்டு பிடிக்­கின்­றனர்.
மாவட்ட வெட்­டுப்­புள்­ளியை அன்­றி­ருந்த அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி தரப்­ப­டுத்­தலை மேற்­கொண்ட போது அழ­கிய தமிழில் பேசி அப்­பாவி தமிழ் இளை­ஞர்­களை ஆயுதம் ஏந்திப் போராடி மடிய வைத்­த­வர்­களின் பிள்­ளை­களில் யாரா­வது தமிழ் ஈழம் கேட்டு போரா­டி­னார்­களா? அவர்கள் தமது பிள்­ளை­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி கல்வி கற்­பித்­தனர். போராட்டக் களத்தில் வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த அப்­பாவி இளைஞர், யுவ­திகள் போராடி மடிந்­தனர். கைது செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு ஆளாகி சிறையில் வாடி வாழ்வைத் தொலைத்­தனர். இதுவே உண்மை.
இந்­நாட்­டி­லுள்ள நகர்ப்­புற பாட­சாலை மாண­வர்­களைப் போன்று கிரா­மப்­புற மாண­வர்­களும் கல்­வியில் அதி­க­ள­வி­லான சலு­கை­களைப் பெற வேண்டும். கிரா­மப்­பு­றங்­களில் அதி­க­ள­வான தலை­வர்கள், சிந்­த­னை­யா­ளர்கள் உரு­வாக வேண்டும் என்­பதை இலக்­காகக் கொண்டே அர­சாங்கம் ஆயிரம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்யும் திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. இத்­திட்­டத்தின் கீழ் துறை­நீ­லா­வணை மகா வித்­தி­யா­லயம் உள்­ளீர்க்­கப்­பட்­ட­தனால் இங்கு ஒரு புதிய ஆரம்பப் பாட­சாலை உரு­வாக்­கப்­பட்டு கட்­டிடத் திறப்பு விழா இடம்­பெ­று­கின்­றது.
இக்­கட்­டி­டத்­தினை நிர்­மா­ணிக்க முற்­பட்­ட­போது எமது திட்­டத்தை இங்கு நிறை­வேற்­றக்­கூ­டா­தென இம்­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பல பிர­யத்­த­னங்­களைச் செய்தார். அவரின் முயற்சி தோல்வி கண்­டது. அதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தமிழ்த்­தே­சியம் பேசி அர­சியல் செய்­பவர். தமிழ் கிராமம் ஒன்றின் அபி­வி­ருத்­திக்கு தடை­யா­க­வி­ருப்­பது ஏன் என்று கேட்க விரும்­பு­கின்றேன். பேசு­வ­தற்கு மட்டும் சில விட­யங்கள் அழ­காக இருக்கும். ஆனால், அவை நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மா­னதா என்று சிந்­திக்க வேண்டும். எமது நாட்டில் இல்­மனைட் உள்­ளது என்று கதைக்­கின்றோம். ஆனால் அந்த வளத்தைப் பெற்று உச்சப் பயன்­பாட்­டைப்­பெற நினைக்­கின்­றோமா?
அர­சாங்கம் காட்டு யானை­களை அதி­க­ளவில் கொண்­டு­வந்து விட்­டுள்­ளதால் மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் காட்டு யானை தொல்­லைக்கு ஆளா­வ­தாக பேசு­கின்­றனர். அப்­ப­டி­யாயின் அனு­ரா­த­புரம், வெலிக்­கந்தை போன்ற இடங்­களில் தினமும் காட்டு யானை தொல்­லை­யினால் சிங்­கள மக்கள் மர­ண­ம­டை­கின்­றனர். சொத்­துக்­களை இழக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் இதற்கு யார் காரணம்? மக்­களை குழப்பி விட்டு அர­சியல் செய்­வதை விட்­டு­விட்டு மக்­களைப் பாது­காக்கும் வழி­மு­றை­களைச் செய்ய வேண்டும்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று தொற்­றா­நோயின் தாக்கம் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட இளம் யுவதி பணிச்­சங்­கே­ணியில் தூக்குப்போட்டு மரணித்துள்ளார். இள வயது சிறார்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகி அவதியுறுகின்றனர். இந்நிலைமைகளை இல்லாமல் செய்வது பற்றி யாவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜி. சுகுணன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உள்ளிட்டோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.