1/08/2014

| |

கிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்

கிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்  காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிருவாகத்திலுள்ள வெருகல் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம், இரண்டாவது தடவையாகவும் நேற்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது.
குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம், கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட போது அது உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த், இரண்டாவது தடவையாக திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு மூன்று பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அது தோற்கடிக்கப்பட்டது.
பிரதேச சபைத் தலைவர் தமது ஏனைய உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகவே வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து சமர்ப்பித்தார் என்பதாலேயே தாம் அதனை எதிர்த்து தோல்வியடையச் செய்ததாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.