உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/04/2014

| |

இலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறது.

வங்காள விரிகுடாவில் தோற்றம்பெற்றிருந்த தாழமுக்க மையமானது தற்போது சூறாவளியாக விருத்தியடைந்து வருவதாக இணைந்த தைபூன் எச்சரிக்கை மையம் (JTWC) அறிவித்துள்ளது.  
 
சூறாவளி  01 B (Tropical cyclone 01B)  என அழைக்கப்படுகின்ற இச்சூறாவளியானது சென்னைக்கு தென்கிழக்கே 528 கிலோமீற்றர் (285 கடல்மைல்) தொலைவிலும் இலங்கையின்  திருகோணமலைக்கு அண்ணளவாக கிழக்கே  203 கிலோமீற்றர் (110 கடல்மைல்) தொலைவிலும், மட்டக்களப்பிலிருந்து வடகிழக்கு திசையில் 209 கிலோமீற்றர் (113 கடல்மைல்) தொலைவிலும்  நிலை கொண்டுள்ளது. 
 
வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து செல்கின்ற இச்சூறாவளியானது மணித்தியாலத்திற்கு சுமார் 65 - 83  கிலோமீற்றர் (35 knots - 45 knots)சுழற்சி வேகத்தில் காற்று வீசுவதுடன், எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணத்தை கடந்து செல்லும் எனவும் JTWC தெரிவித்துள்ளது.
 
இந்த சூறாவளிக்கு மியன்மார் நாட்டினுடைய தெரிவின்படி Nanuak என்ற பெயர் சூட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.