உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/08/2014

| |

அரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவிருத்தி

கல்குடா கல்வி வலயத்தின் கல்வி, கலாசார மற்றும் சமூகமேம்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
 
அரசியல் பேதங்களுக்கு அப்பால் கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் , வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் சமூக பற்றாளர்களும் இதில் கலந்து கொண்டு தங்களது உயர்வான கருத்துக்களை பரிமாறினார்கள்.
 
முன்னாள் முதலமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம் முயற்சியானது பல கட்டங்களாக வகக்கப்பட்டு 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் மற்றும் செயன்முறைகள் தொடர்பாகவும் விரிவாக அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த சில பாடசாலைகளின் குறைபாடுகள் சில உடனடியாகக் தீர்த்து வைக்கப்பட்டமையும் இக் கலந்துரையாடலின் சிறப்பம்சமாகும்.