உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/04/2014

| |

கிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான   கலந்துரையாடல்கள் மண்முனை வடக்கு அபிவிருத்தி குழுத் தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்று வருகின்றது இதன் ஒரு பகுதியாக  நொச்சிமுனை தருமரெத்தினம் வித்தியாலயத்தில் 01.02.2014 அன்று இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் முக்கியமான அபிவிருத்திகள் பணிகள் தொடர்பாக கிராம மக்களிடம் இருந்து இனங்காணப்பட்டதோடு அபிவிருத்திப் பணியில் மக்கள் பங்களிப்பு என்ன என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.கிரிதரன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சிவராஜா உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜெகதீஸ்குமார் மட்டக்களப்;பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபாச்சக்கரவர்த்தி உள்ளீட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.