2/11/2014

| |

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி பெட்டி வழங்கி வைக்கப்பட்டன.

Moothur News copyஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவான 121பாடசாலைகளுக்கு தொலைகாட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வுசனிக்கிழமை (08.02.2014) திருகோணமலை விக்னேஸ்வரா கல்லூரியில்  இடம் பெற்றன.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுனவர்தன மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மாகாண கல்வி ஆணையாளர் எம்.டி.ஏ. நிஸாம் ,வலய கல்வி பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.காசீம், சுனில் குணதிலக்க , என்.எஸ்.பிரேமசந்திர, யு.எல்.எம்.காசீம், குருவிட தர்மசேன,எம்.எஸ்.ஏ.ஜலீல், ஏ.எம்.அகமட், என்.விஜேந்திரன், ஆர்.சுகிர்தராஜன், எம்.ஏ.விமலசேன, எஸ்.சக்கரவத்தி,என்.புள்ளேநாயகம், எஸ்.சிரிகிரிஸ்னராஜாபீ.எம்.எம்.எஸ்.எஸ்.எஸ்.பஸ்நாயக்க, ஏ.விஜயாநந்த மூர்த்தி ஆகியோரும் இந்நிகழ்வில்  கலந்துக் கொண்டனர்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தொலைகாட்சி பெட்டி வழங்குமாறு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே  கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு   இணங்கவே மேற்படி தொலைக்காட்சி பெட்டிகள் கிடைக்கப்பெற்றன. ந்த தொலைக்காட்சி பெட்டிகள்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 
 அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
நீண்ட காலமாக திருகோணமலை மாவட்டத்தில் குறைபாடாக உள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிச்சி கல்லூரி ஒன்றும் அமைத்து தருமாறும்  இந்த நிகழ்வுக்கு சமுகமளித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே  மேலும் ஒரு கோரிக்கையை  முன்வைத்தார்.

அதற்கு இணங்க உடனடியாக இக்கட்டடத்திற்கான ஆரம்ப வேலை திட்டங்களை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன  அனுமதி வழங்கினார்.

 பட்டதாரி பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்காக இரவு பகலாக பாடுபட்ட பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயை  அமைச்சர் பந்துல  வாழ்த்தியதாக திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேயின் இணைப்புச் செயளாலர் மூதூர் ஐ.ம.சு.கூ.தலைவருமான ஜெயினுதீன் அமீர் தெரிவித்தார்.