உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/04/2014

| |

முன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகளுக்கு விசேட அனுமதி

சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்தில் தமது வாழ்வாதாரத்திற்காக விறகு எடுத்து விற்பனை செய்துவரும் வியாபாரிகளுக்கான அனுமதியினை விசேடமாக பெற்றுத்தருவது தொடர்பான விசேட கூட்டம் கடந்த 02.02.2014 அன்று சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதல்வருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக மஅவருடைய செயலாளர் ஆ.தேவராஜா அவர்கள் விறகு வியாபாரத்தில் ஈடுபடும் தொழிலாளிகளை சந்தித்தார். இவ் ஒன்று கூடலின்போது முன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு எடுப்பதற்கு இக் குறிப்பிட்ட வியாபாரிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரின் செயலாளர் ஆ.தேவரபஜா அவர்களும் , சித்தாண்டி -01 மாவடிவேம்பு-02 கிராம உத்தியோகத்தர் பூ. அருள்நாதன்,  விற்கு வியாபாரிகள் மற்றும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.