உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/07/2014

| |

மட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

இவ் வேலைத்திட்டத்தின்கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்டிருப்பு/காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றறல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில்மட்/பட்டிருப்பு/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.