உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/08/2014

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி நடாத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சியின் மகளிர் அணி நடாத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் எதிர்வரும் 08ஆம் திகதி சனி;க்கிழமை நடைபெறவுள்ளது.

வட்டித்தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம் என்ற தொனிப்பொருளில் இந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொள்ளவுள்ளது.

இதனை முன்னிட்டு 08ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் பெண்கள் கலந்துகொள்ளும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி காந்திபூங்காவில் இருந்து செல்வநாயகம் மண்டபம் வரையில் நடைபெறவுள்ளது.

அங்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது பெண்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு கருத்துரைகளும் நடைபெறவுள்ளதுடன் பெண்களை பாதுகாக்கும் முக்கிய தீர்மானங்களும் வெளியிடப்படவுள்ளதாக கட்சியின் மகளிர் அணி தலைவி .திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துப்பெண்களையும் ஒன்றுகூடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.